லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டலின் பதவியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஆணையத்தின் செயலா் அனுப்பியிருந்த கடிதத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியான டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலான சந்தீப் மித்தலை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தற்போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை இயக்குநராக பதவி வகித்து வந்த சந்தீப் மித்தல், அந்தப் பொறுப்பில் இருந்து ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
சந்தீப் மித்தல் ஆயுதப்படை இயக்குநராக செயல்படுவார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொறுப்பை தொடர்வார் என்று கூறப்படுகிறது.
தமிழக தலைமைச் செயலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், உள்துறை செயலர் பதவிகள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆயுதப் படை இயக்குநராக சந்தீப் மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Summary
Sandeep Mittal relieved of charge of Anti-Corruption Department! Sandeep Mittal appointed as Director General of Armed Forces!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக அருண் நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சந்தீப் கிஷனின் புதிய படம்!

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



