லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்வார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி பொறுப்பில் இருந்து டேவிட்சனை விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தற்போது அந்த உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்ட சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டிஜிபியாக செல்படுவார் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சந்தீப் மிட்டல், பாஜக ஆதரவாளர் என தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தலையொட்டி ஏற்கெனவே தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
அந்த வரிசையில் தமிழக அரசின் தலைமைச் செயலர், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி உள்ளிட்டோரையும் மாற்றி ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The Election Commission has announced that Davidson Devasirvatham will continue as the DGP of the Directorate of Vigilance and Anti-Corruption.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!

தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றம்!

லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மித்தல் நியமனம்

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




