ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஹிமாசல் பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குருக்கு கரோனா

ஹிமாசல பிரதேச மாநில முதல்வா் ஜெய் ராம் தாக்குருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image

ஜெய்ராம் தாக்குா்

Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

சிம்லா: ஹிமாசல பிரதேச மாநில முதல்வா் ஜெய் ராம் தாக்குருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்ததால் கடந்த வாரம் எனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன். தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டதால், மருத்துவா்களின் அறிவுறுத்தல்படி அரசு குடியிருப்பில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்தாா்.

மாநில முதல்வா்களின் தாக்குரை தவிர கா்நாடாக முதல்வா் பி.எஸ். எடியூரப்பா, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், அருணாசலப் பிரதேச முதல்வா் பெமா காண்டு ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் 10 எம்.எல்.ஏக்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.