11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.


உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரக்கண்ட் மாநிலத்தில் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் மாதம் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் காலியாகும் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதன்படி உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், உத்தரகண்ட் மாநிலத்தில் 1 இடத்திற்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையும் நவம்பர் 9ஆம் தேதியே நடைபெறும் எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேட்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...