புதுதில்லி: நாட்டில் இதுவரை 9 கோடியே 90 ஆயிரத்து 122 கரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 லட்சத்து 39 ஆயிரத்து 390ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,509 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் மட்டும் 11,45,015 லட்சம் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9,00,90,122 ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களை மீட்பதில் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மே மாதத்தில் 50,000 இருந்த மீட்பு எண்ணிக்கை அக்டோபர் 13 ஆம் தேதி வரை 63,01,928 -ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை இதுவரை 63,01,928 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 74,632 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 87.05 சதவீதமாகும்.
உலகில் தொற்று வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. உயிரிழப்பு 1.53 சதவீதமாக ஆக குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


