ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 அக்டோபர் 2020, 7:50 am

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,604 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,59,541-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 25,428 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,32,988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  புதிதாக 15 பேர் உயிரிழந்ததால், கரோனாவால் மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,072-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 42,167 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.