பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 680 போ் பலி; பாதிப்பு 73,07,098 ஆக உயர்வு

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 680 பேர் உயிரிழந்தனா். புதிதாக 67,708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கடந்த 24 மணி நேரத்தில் 680 போ் பலி; பாதிப்பு 73,07,098 ஆக உயர்வு

Updated On :15 அக்டோபர் 2020, 4:46 am

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 680 பேர் உயிரிழந்தனா். புதிதாக 67,708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, தொடா்ந்து 9 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தொடா்ந்து 11-ஆவது நாளாக, தினசரி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 67,708 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 73,07,098 -ஆக அதிகரித்தது. அதே கால அளவில்  81,541 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 63,83,442 -ஆக அதிகரித்தது. அதாவது, 87.36 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,12,390 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 11.12 சதவீதமாகும்.

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு மேலும் 680 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,11,266-ஆக அதிகரித்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 14-ஆம் தேதி வரை 9,00,90,122 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,36,183 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.