‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிஎஸ்எல் தொடரில் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வெள்ளைப் பந்து..! பாகிஸ்தானுக்கு அவமானம்!

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நடந்த சுவாரசியமான நிகழ்வு குறித்து...

A billboard of Pakistan's premier domestic T20 the Pakistan Super League, which will take place in empty stadiums due to the recent spike in oil prices, is displayed at a road in Rawalpindi, Pakistan, Tuesday, March 24, 2026. (AP Photo/Anjum Naveed)

பாகிஸ்தானில் வைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல் பதாகை. - படம்: ஏபி

Published On :

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெள்ளைப் பந்து இளஞ்சிவப்பு (பிங்க்) நிறமாக மாறிய நிகழ்ச்சி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபலமான டி20 லீக்கில் நடந்த இந்த நிகழ்வு ”பாகிஸ்தான் நாட்டிற்கே அவமானம்” என அந்நாட்டு ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் போல பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் லாகூர்  கலந்தர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி 20 ஓவர்களில் 199/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியினர் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியில் பந்தினை தேய்க்க அது பந்தில் பதிந்தது. பொதுவாகவே பந்தினை பழபழப்பாக்க கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடையில் தேய்ப்பது வழக்கமான ஒன்று. ஆனால், பிஎஸ்எல் தொடரில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு அந்தத் தொடரின் மீது நன்மதிப்பை இழக்கச் செய்துள்ளது.

ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்னஸ் லபுஷேன், “பந்து சிவப்பு நிறமாக மாறுகிறதே? என்ன நடக்கிறது? என இரண்டாவது ஓவரிலேயே நடுவரிடம் இது குறித்து முறையிட்டேன். இது ஜெர்ஸியினால் ஏற்பட்டிருக்கும்.

சில நேரங்களில் பேட் அல்லது ஃபேட்டில் பட்டு நிறம் மாறுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், உடையினால் இப்படி ஆகிப் பார்த்ததில்லை. விரைவில் இதைச் சரிசெய்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

ஹைதராபாத் கிங்ஸ்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், “முதல் பிங்க் பந்தில் வென்ற லாகூர் அணிக்கு வாழ்த்துகள்” என கிண்டலாக பதிவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இது மிகப்பெரிய அவமானம் எனக் கூறி வருகிறார்கள்.

Summary

Never Seen Anything Like This: Marnus Labuschagne Shames PSL Over 'Pink Ball' Drama

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.