பிகார் பேரவைத் தேர்தல்: 5 ஆண்டுகளில் 144% உயர்ந்த எம்.எல்.ஏ சொத்து மதிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் பிகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனந்த்குமார் சிங்கின் சொத்து மதிப்பு 144% சதவிதமாக உயர்ந்து அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
அனந்த குமார் சிங்
அனந்த குமார் சிங்

கடந்த 5 ஆண்டுகளில் பிகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனந்த்குமார் சிங்கின் சொத்து மதிப்பு 144% சதவிதமாக உயர்ந்துள்ளது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொகாமா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அனந்த்குமார் சிங். இவர் தற்போது நடைபெற உள்ள பிகார் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்டிர ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பிரமாணப் பத்திரிக்கையில் அவர் தனது சொத்து மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு ரூ.28 கோடியாக இருந்த அவரின் சொத்து மதிப்பு தற்போது 144% உயர்ந்து ரூ.68 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் பிகார் தேர்தலில் போட்டியிடும் பணக்காரர்களின் பட்டியலில் அனந்த்குமார் சிங் முன்னணியில் உள்ளார்.

அவரது மொத்த சொத்துகளில், அசையா சொத்துகள் ரூ.50 கோடி மதிப்பிலும், மீதமுள்ள ரூ .18 கோடி அசையும் சொத்துக்களாகவும் உள்ளன. அவரைத் தொடர்ந்து காங்கிரஸின் கஜானந்த் ஷாஹி ரூ.61 கோடி சொத்துக்களுடனும்,மூன்றாவது இடத்தில் ஜே.டி.யூ.வின் மனோர்மா தேவி ரூ.50 கோடி சொத்துக்களுடனும் உள்ளனர்.

இதற்கு நேர்மாறாக, கயா டவுனில் போட்டியிடும் லோக்ஜன் கட்சியின் வேட்பாளர் ரிங்கு குமார் தனது மொத்த சொத்துக்களாக ரூ.2,700 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். பதிவு செய்துள்ளார்.

பீகார் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 1,064 வேட்பாளர்களில், 375 பேர் கோடிஸ்வர வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com