தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

'வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும்'

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை (கோப்புப்படம்)
Updated On :23 அக்டோபர் 2020, 11:21 am

DIN

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பருவமழைத் தொடங்கியது முதல் நாட்டில் ஒரு சில மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் நாளை (சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.