நாட்டிலேயே முதல்முறையாக குஜராத்தில் உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெறும் வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டு வருகிறது.
கரோனா அச்சறுத்தல் காரணமாக பல்வேறு சேவைகள் முடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரோனா அச்சுறுத்தலால் தற்போது பல்வேறு நிறுவனங்களின் முக்கியக் கூட்டங்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் என முழுவதும் ஆன்லைன் வழியாகவே நடைபெறுகின்றன.
அதேபோன்று, தற்போது பல மாநிலங்களில் பாதிப்பு குறைந்தாலும் கரோனா அச்சம் காரணமாக நீதிமன்றங்களில் பெரும்பாலாக காணொலி மூலமாகவே விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, இதன் அடுத்தகட்டமாக குஜராத்தில் முதல்முறையாக நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை ஜூம் செயலி மூலமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைகள் https://www.youtube.com/watch?v=WpqQWBERB_Y என்ற யூட்யூப் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! - மு.க.ஸ்டாலின்

திருநீறு அணிந்து காட்சிதரும் பெருமாள்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு!
99.93% வாக்குகள்... வடகொரிய அதிபர் தேர்தலில் கிம் ஜோங் உன் அமோக வெற்றி!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

