குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் 18 சதவீத வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
ஏடிஆர் அறிக்கையின்படி, 80 வேட்பாளர்களில் 14 பேரின் வாக்கெடுப்பு பிரமாணப் பத்திரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு குற்றவியல் வழக்குகளை அறிவித்துள்ளனர், அவர்களில் ஏழு பேர் கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
கட்சி வாரியாக, பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர், பாஜகவின் 8 வேட்பாளர்களில் 3 பேர், காங்கிரசின் 8 வேட்பாளர்களில் 2 பேர், 53 சுயேச்சை வேட்பாளர்களில் 8 பேர் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அறிவித்துள்ளதாக ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.
கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்பவர்களில் பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர், பாஜகவைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்களில் இருவர், 53 சுயேச்சை வேட்பாளர்களில் 4 பேர் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து அப்தாசா, லிம்ப்டி, மோர்பி, தாரி, கடதா, கர்ஜன், டாங் மற்றும் கப்ராடா ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


