அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து: எதிர்க்கட்சிகள் கண்டனம்

நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

News image
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து: எதிர்க்கட்சிகள் கண்டனம்
Updated On :27 ஜனவரி 2024, 5:14 pm

DIN

நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற அவைக் கூட்டங்கள் முன்னதாகவே நடத்தி வைக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டன. தொடர்ந்து நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பே கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் இடைவெளியுடன் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வழக்கமாக நடைபெறும் சபை நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயலகம் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடுமையானப் பொருளாதார வீழ்ச்சி, அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவல், இந்தியச் சீன எல்லையில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பைக் கிளப்பி உள்ளது.  மத்திய அரசின் ஜனநாயகப் படுகொலைக்கு கரோனா காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவை சபைத்தலைவர் ஓம்பிர்லாவிற்கு மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் எழுதிய கடிதத்தில் அரசைக் கேள்வி கேட்க கேள்விநேரத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.