குஜராத்: குட்கா, புகையிலைக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
குஜராத்தில் குட்கா, புகையிலை பொருட்களின் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


குஜராத்தில் குட்கா, புகையிலை பொருட்களின் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை, இருப்பு வைத்தல், தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றின் மீது ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குஜராத் மாநில துணை முதல்வரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிதின் படேல், ''நிகோடின் கொண்டுள்ள குட்கா, பான் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் தயாரிப்புக்கு குஜராத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு மேலும் ஓராண்டுக்கு இந்த தடை நீட்டிக்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின்படி புகையிலை பொருட்களின் மீதான தடைக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பவை. இதனால் ஆரோக்கியத்தை கடைப்பிடிக்கும் வகையிலும், அடுத்தத் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் விதமாகவும் புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...