பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஞ்சி வந்த ராஜ்தானி விரைவு ரயில்: காரணம் இதுதான்!

புது தில்லியில் இருந்து ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை ராஞ்சி வந்தடைந்தது. 

News image

ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஞ்சி வந்த ராஜ்தானி விரைவு ரயில்

Updated On :4 செப்டம்பர் 2020, 10:02 am


ராஞ்சி: புது தில்லியில் இருந்து ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை ராஞ்சி வந்தடைந்தது. 

டோரி சந்திப்பில் டானா அமைப்பினர் நடத்திய  போராட்டம் காரணமாக ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல், மாற்றுப்பாதையில் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை ராஞ்சியை அடைந்தது.

வியாழக்கிழமை புது தில்லியில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில், டால்டோன்கஞ்ச் பகுதியில் நடந்த போராட்டத்தால், ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல், பாதி வழியில் நின்றது. அதில் இருந்த 930 பயணிகளும் பேருந்து மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், ஒரே ஒரு பெண் பயணி அனன்யா, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த மாற்றுப் போக்குவரத்தை ஏற்க மறுத்து, ரயிலிலேயே செல்வேன் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ரயில் பயணத்துக்குக் கட்டணம் செலுத்திவிட்டு, பேருந்தில் பயணிக்க அவர் விரும்பவில்லை. இதனால், ரயில் அதிகாரிகள் இறுதியாக, சட்டக் கல்லூரி மாணவியான அனன்யாவை ரயிலில் கோமோ மற்றும் பொகாரோ வழியாக 535 கிலோ மீட்டர் பயணித்து ராஞ்சிக்கு அனுப்பி வைத்தனர். இது வழக்கமான பாதையை விட 225 கி.மீ. தொலைவாகும்.

இது குறித்து அனன்யா கூறுகையில், என்னை பேருந்து அல்லது டேக்ஸி மூலம் ராஞ்சி செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். ஆனால், நான் ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறேன். ஏன் பேருந்தில் செல்ல வேண்டும் என்று கேட்டேன். இறுதியாக இந்திய ரயில்வேயின் சுட்டுரைப் பக்கத்தில் இது பற்றி நான் தெரிவித்ததும், ராஞ்சிக்கு ரயிலில் வந்தடைந்தேன் என்கிறார்.

டோரி சந்திப்பில் நடந்த போராட்டத்தால் மேற்கொண்டு ரயிலை இயக்க முடியாததால், மாவட்ட நிர்வாகமே பேருந்து வசதியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பயணியும் அவர்கள் செல்லுமிடத்தை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வேயின் கடமை. அதனால்தான் பேருந்தில் செல்ல மறுத்த பெண்ணை மாற்றுப் பாதையில் ரயிலில் ராஞ்சிக்கு அனுப்பி வைத்தோம். சுமார் 15 மணி நேரம் தாமதமாக ராஜ்தானி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.45க்கு ராஞ்சி சென்றடைந்தது என்கிறார் ரயில்வே அதிகாரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.