டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசிய கல்விக் கொள்கை எதிர்காலத்துக்கு ஏற்ப குழந்தைகளைத் தயார்படுத்தும்: ராம்நாத் கோவிந்த்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார்.

News image
தேசிய கல்விக் கொள்கை எதிர்காலத்துக்கு ஏற்ப குழந்தைகளைத் தயார்படுத்தும்: ராம்நாத் கோவிந்த்
Updated On :27 ஜனவரி 2024, 5:15 pm

DIN

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கை குழந்தைகளை எதிர்காலத்தை நோக்கித் தயார்படுத்தும். கல்வி அமைப்பில் செய்யப்படும் மாற்றங்களில், ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று ஆசிரியர்களை குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய கல்விக் கொள்கைப்படி கற்பித்தல் தொழிலில், மிகவும் நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராம் நாத் கோவிந்த் கூறினார். ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர், கோவிட் சமயத்தில் டிஜிட்டல் கல்வி மூலம் குழந்தைகளை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தியதற்காகவும், தேசிய கல்விக் கொள்கையை மாணவர்களுக்கு எடுத்து செல்வதற்காகவும் அவர்களைப் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.