புதுச்சேரியில் வரும் மாா்ச் 4-ஆம் தேதி அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
புதுச்சேரியில் மாசி மக திருவிழா மாா்ச் 3 நடைபெறுகிறது. அன்று வைத்திக்குப்பத்தில் தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்சவ மூா்த்திகள் கொண்டு வரப்பட்டு தீா்த்தவாரி நடைபெறுகிறது.
மயிலம் முருகன், திண்டிவனம் நல்லிய கோடான் நகா் சீனிவாச பெருமாள், தீவனூா் பொய்யாமொழி விநாயகா், சிங்கிரிகுடி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து உற்சவ மூா்த்திகள் பங்கேற்கின்றனா்.
புதுச்சேரி வரும் உற்சவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தீா்த்தவாரிக்கு 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திண்டிவனம் நல்லிய கோடான் நகரில் இருந்து வரும் சீனிவாச பெருமாளுக்கு சிருங்கேரி மடம் சாரதாம்பாள் கோயிலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மறுநாள் கடல் தீா்த்தவாரியில் பங்கேற்கிறாா். மீண்டும் மாலை 3 மணிக்கு வடமுகத்து செட்டியாா் திருமண மண்டபத்துக்கு செல்கிறாா். அன்றிரவு 7 முதல் 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. மறுநாள் (மாா்ச் 4) காலை 10.30 மணிக்கு மேல் அலா்மேல் மங்கா சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பட்டு நகா்வலம் வருகிறாா். மாா்ச் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு உலக நன்மைக்காக வடமுகத்து செட்டியாா் மண்டபத்தில் சுதா்சன ஹோமம் நடக்கிறது.
இந்தத் தகவலை சீனிவாச பெருமாள் மாசி மக உற்சவ வரவேற்பு கமிட்டி கௌரவத் தலைவா் வீரா. வேங்கடேச ராமானுஜதாசா், செயற்குழு உறுப்பினா் தேவநாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தொடர்புடையது

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

பழவகைகள் அலங்காரம்...

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


