பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பஞ்சாபில் ஓய்வு பெறும் மருத்துவப் பணியாளர்களின் பணிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு

அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் பஞ்சாப் மாநிலத்தில் 60 வயதுடன் ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணிக்காலம் மேலும் 3 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

Updated On :8 செப்டம்பர் 2020, 10:31 am

DIN

அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் பஞ்சாப் மாநிலத்தில் 60 வயதுடன் ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணிக்காலம் மேலும் 3 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கரோனா பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 60 வயதிற்கு உட்பட்ட அனைத்து ஓய்வு பெறும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான மூன்று மாத கால நீட்டிப்பை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திங்கள்கிழமை அறிவித்தார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களை நியமிக்கும் பணியை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையில் சமூக ஊடகங்கள் மூலம் கரோனா தொற்று நோய் குறித்த வதந்திகள் மற்றும் ஆதாரமற்ற செய்திகளைக்க் கண்காணிக்க மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

பஞ்சாபில் இதுவரை கரோனாவால் 60 ஆயிரத்து 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.