வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை அந்தந்த கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை 3 முறை அந்தந்த கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை 3 முறை அந்தந்த கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறி முறையில், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை அந்தந்த கட்சிகள், நாளிதழ் மற்றும் ஊடங்களில் வெளியிட வேண்டும்.
வேட்பாளர்கள், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...