தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலகக்கோரி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் தொடர்புடையதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதில் ஆஜராக மறுப்பு தெரிவித்து வந்த அமைச்சர் ஜலீலை கண்டித்து பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் கலீலின் அறிக்கைகளை ஆராய்ந்து மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையெ அமைச்சர் கலீல் பதவி விலக வலியுறுத்தி பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்துகொண்டு அமைச்சர் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரானால் அச்சுறுத்தல் இல்லை! போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமா

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி ஸ்டில்ஸ்

திருமண மண்டபங்கள், தனியாா் நிதி நிறுவனங்கள், அச்சக உரிமையாளா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

