சத்தீஸ்கரில் ஒரே நாளில் அதிக அளவாக கரோனா பாதிப்பு
சத்தீஸ்கரில் அதிக அளவாக நேற்று 3,896 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


சத்தீஸ்கரில் அதிக அளவாக நேற்று 3,896 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் சத்தீஸ்கரில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து சத்தீஸ்கர் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,896 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,02,461-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 30,689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து புதிதாக 3,187 பேர் குணமடைந்ததால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 70,955-ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...