கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிர முதல்வருடன் சரத் பவார் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 செப்டம்பர் 2020, 2:27 pm

DIN


தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. எனினும், சரத் பவார் இதுபற்றி செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸை சனிக்கிழமை சந்தித்தார். இந்த நிலையில், சரத் பவார் இன்று உத்தவ் தாக்கரேவைச் சந்தித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சஞ்சய் ரௌத் ஃபட்னவீஸைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், சஞ்சய் ரௌத்துடனான சந்திப்பின்போது ஆட்சி அமைப்பது பற்றியும், கூட்டணி குறித்தும் எதுவும் பேசவில்லை என்று ஃபட்னவீஸ் பின்னர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.