குஜராத், ம.பி. உள்ளிட்ட 11 மாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவிப்பு

குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பிகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 

மணிப்பூரில் காலியாக உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பிகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும். 

முன்னதாக, தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதாக மாநில தலைமைச் செயலர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதால், தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை என ஆணையம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com