ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குடியாத்தம், திருவொற்றியூரில் இடைத்தேர்தல் இல்லை: ஆணையம்

தமிழகத்தில் காலியாகவுள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
தேர்தல் ஆணையம்
Updated On :29 செப்டம்பர் 2020, 8:44 am

DIN

தமிழகத்தில் காலியாகவுள்ள குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதேபோன்று, கேரளம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக மேற்குறிப்பிட்ட 4 மாநில தலைமைச் செயலாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த முடிவினை வெளியிட்டுள்ளது. 

மேலும், காலியாக உள்ள பிற மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநில சூழ்நிலைகளைப் பொருத்து தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொருத்தவரை குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளின் காலம் 24.05.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் - மே மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மேற்குறிப்பிட்ட இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.