நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வந்தால் மேலும் நோய்த் தொற்று தீவிரமாகும் என்ற நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இதனால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, ஊரடங்கை நீட்டிப்பதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்

இருந்தும் பயன்படாத கைப்பேசி பைகள்; பெயரளவுக்கு செயல்பட்ட சக்கர நாற்காலிகள்

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


