தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 6:07 am

நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 1,297 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வெளியே வரும் போது முகக்கவசம் அணிந்து கொண்டு வரும்படி மகாராஷ்டிர அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. மும்பையில் கரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறிவருவதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ எட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.