ராஜஸ்தானில் ஒரேநாளில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 751 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் ஒரேநாளில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

ராஜஸ்தானில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 751 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை  8,356 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 273 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார். இதில், ஜெய்ப்பூர், பன்ஸ்வாராவில் தலா 15 பேரும், ஜோத்பூர், பிகானேரில் தலா 8 பேரும், ஹனுமம்கர்ஹ் பகுதியில் 2 பேரும், ஜெய்சல்மர், சுரு, சிகார் பகுதிகளில் தலா ஒருவர் என 51 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 751  ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com