மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி


கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வல்லரசு நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கக்கூடும்.

இந்த 21 நாள் ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாட்டு மக்களுக்கு நன்மை விளைந்திருக்கிறது.

இதை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டால் கவலைப்பட வேண்டியிருக்கும். மேலும் மரணங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது.

இதுகுறித்து மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படும். அதன்பிறகு, சில தளர்வுகள் அறிவிக்கப்படும்.

கரோனா தொற்று தொடர்ந்து நீடித்தால், தளர்வுகள் கட்டுப்படுத்தப்படும். இதுபற்றிய விதிமுறைகள் நாளை அறிவிக்கப்படும். 

ஏழைகளின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி மிகப் பெரும் சவாலாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விநியோகத் தொடர் துண்டிக்கப்படாமல் கவனித்துக் கொள்ளப்படும்.

நோய்த் தொற்றுக்கா 210 சோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 லட்சத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. 600-க்கும் மேலான மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்பத்தினரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். கஷ்டப்படுபவர்களுக்கு உணவு வழங்குங்கள். யாரையும் வேலையைவிட்டு நீக்கக் கூடாது.

இந்த கடினமான சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இவையனைத்தும்தான் கரோனாவை எதிர்த்து வெற்றியடைவதற்கான வழிமுறைகள். மே 3 வரை ஊரடங்கைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்." என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com