பிரதமர் மோடி உரை - லைவ் அப்டேட்ஸ்

​பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடி உரை - லைவ் அப்டேட்ஸ்


பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

 இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி...

 மே 3 வரை ஊரடங்கைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க  வேண்டும்..

 இவையெல்லாமும்தான் வெற்றியடைவதற்கான வழிமுறைகள்...

கடினமாக சூழலில் டாக்டர்,  நர்ஸ், காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி..

 யாரையும் வேலையைவிட்டு நீக்கி விடாதீர்கள்...

 கஷ்டப்படுபவர்களுக்கு உணவு வழங்குங்கள்...

 ஆரோக்ய சேது செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்...

 நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்...

 முகக் கவசங்களைக் கைவிடாதீர்கள்...

 சமூக இடைவெளியைச் சரியாகக் கடைப்பிடியுங்கள்....

 குடும்பத்தினரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்...

 நாட்டு மக்கள் ஒழுங்காக இருந்தால் கரோனாவிலிருந்து விடுபடலாம்...

 கரோனா வைரஸை ஒழிப்பது தொடர்பாக விஞ்ஞானிகள் பாடுபட்டு வருகிறார்கள்...

 600-க்கும் மேலான மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன...

 ஒரு லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள் தயாராக இருக்கின்றன...

 210 சோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன...

 விநியோகத் தொடர் துண்டிக்கப்படாமல் கவனித்துக் கொள்ளப்படும்...

 மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளும்...

 புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் மக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும்...

 இந்தப் பணி மிகப் பெரும் சவாலாக இருக்கிறது...

 பல ஏழைகளின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது...

 நாளை இதுபற்றிய விதிமுறைகள் அறிவிக்கப்படும்...

கரோனா தொற்று தொடர்ந்தால் தளர்வுகள் எல்லாம் கட்டுப்படுத்தப்படும்...

 ஏப். 20 தேதிக்குப் பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்படும்...

மற்ற நாடுகளின் நிலைமைகளை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்...

மேலும் பல நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவிருக்கிறோம்...

 புதிதாக தொற்று தொடர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும்...

 மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

 மேலும் மரணங்கள் வந்துவிடக் கூடாது....

 புதிதாக வந்தால் மிகவும் கவலைப்பட வேண்டியிருக்கும்...

 புதிதாக யாருக்கும் தொற்று வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...

 நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்....

 மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது...

 21 நாள் ஊரடங்கின்போது எண்ணிக்கை 500 தான் இருந்தது...

கடினமான சூழ்நிலையைப் பல வல்லுநர்கள் எதிர்கொண்டுள்ளனர்...

 பல மாநிலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கரோனாவை ஒழிப்பதில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன...

 பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் இந்த ஊரடங்கால் நாட்டு மக்களுக்கு நன்மை விளைந்திருக்கிறது...

 21 நாள் ஊரடங்கு காரணமாக இந்தியாவுக்கு மிகப் பெரிய நன்மை கிடைத்திருக்கிறது...

 தக்க தருணத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாக ஆகிவி்ட்டிருக்கும்...

 இந்தியாவில் நிலைமை எவ்வளவோ நன்றாக இருக்கிறது...

 பல நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்...

 வல்லரசுகளுடன் ஒப்பிட நாம் எவ்வளவோ நல்ல நிலையில் இருக்கிறோம்... 

 வல்லரசு நாடுகளையும் இந்த கரோனா ஆட்டிப் படைக்கிறது...

வேறு எந்த நாட்டுடனும் தொடர்பு இல்லாமல் இருப்பது கடினமான செயல்...

 நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் இந்த கரோனாவை வெல்வோம்...

 இந்த 21 நாள்களில் இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது...

 சம்பந்தப்பட்டவர்களைத் தனித்து வைத்துவிட்டோம்...

 எப்போது நம் நாட்டில் ஒரு கரோனா நோயாளிகூட இல்லாதபோதே வெளிநாட்டிலிருந்து வருவோரை சோதிக்கத் தொடங்கிவி்ட்டோம்...

 கரோனாவால் மக்கள் படும் கஷ்டத்தை நான் உணருகிறேன்...

 நாட்டு மக்கள் எவ்வாறு சட்டத்தை மதித்து வீட்டிலிருக்கிறார்களோ, அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி...

 புதிய ஆண்டு தொடங்கியிருக்கிறது...

 திருவிழாக்கள் நிறைந்த நாடு இத்தகைய கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது...

 அம்பேத்கரை வணங்குகிறேன்...

 பாபா அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று...

 நாடு சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது...

 இவற்றைச் சகித்துக் கொள்ளும் நாட்டு மக்களை வணங்குகிறேன்...

 சிலருக்கு வந்து செல்ல பிரச்சினை...

 சில பேருக்கு உணவுப் பிரச்சினை...

 கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு நாட்டு மக்கள் தங்கள் கடமையை ஆற்றிவருகின்றனர்...

 கடினமான சூழ்நிலையில் நாடு சென்று கொண்டிருக்கிறது...

 வணக்கம்...

நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரை...

 நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரை...

உயிர் அச்சத்தால் ஒளிந்துகொண்ட மக்களால் மூச்சுவிடுகிறது இயற்கை

கரோனா நோய்த் தொற்றின் மூர்க்கமான தாக்குதலால் ஒருபுறம் திணறிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் பெரும்பேறாக உலகின் பல பகுதிகளில் இந்த பூமிப் பந்து தன் இயல்பு நிலை என்னவெனக் காணத் தொடங்கியிருக்கிறது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.87 லட்சம் பேர் கைது!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com