கரோனா பரிசோதனையில் இந்தியா பின்தங்கியுள்ளது: ராகுல் காந்தி

கரோனா பரிசோதனையில் இந்தியா பின்தங்கியுள்ளதாக காங்கிரஸ் முன்னதாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 
கரோனா பரிசோதனையில் இந்தியா பின்தங்கியுள்ளது: ராகுல் காந்தி

கரோனா பரிசோதனையில் இந்தியா பின்தங்கியுள்ளதாக காங்கிரஸ் முன்னதாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், கரோனா நோய் தொற்றிற்கான சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது. அதனால், தற்போது, சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு வெறும் 149 சோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது. லாவோஸ்(157), நைஜர்(182) மற்றும் ஹோண்டரஸ்(162) ஆகிய நாடுகளின் நிலையில்தான் உள்ளோம்.

கரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு அதிக அளவில் பரிசோதனை செய்வது முக்கியம். ஆனால் அந்த முயற்சியில் தற்போது நாம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com