ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு அறிவிப்புகளை இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார். அதில், 2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ரெப்போ வட்டி விகிதம், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், விவசாயிகளுக்கு கடன் குறித்த பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை பெரிதும் மேம்படுத்துவதோடு கடன் வழங்கலை ஊக்குவிக்கும். இதன் மூலமாக சிறு வணிக நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் பயன்பெறுவர். இது அனைத்து மாநிலங்களுக்கும் உதவும்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


