பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை இரவு நெஞ்சுவலியால் மரணம் அடைந்தது குறித்து...

News image

தேர்தல் பணியின் போது நெஞ்சுவலியால் மரணம் அடைந்த வாழப்பாடியைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன். - டிஎன்எஸ்

Updated On :24 ஏப்ரல் 2026, 1:17 pm IST

வாழப்பாடி: தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை இரவு நெஞ்சுவலியால் மரணம் அடைந்த சம்பவம், காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அய்யாவு கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (58). குடும்பத்துடன் வசித்து வந்த இவர், மல்லிகரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

மல்லிகரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பணியில் இருந்த இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை மீட்ட சக காவலர்கள் சிகிச்சைக்காக அயோத்தியாப்பட்டணம் மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி கண்ணதாசன் உயிரிழந்தார். இவரது உடல் கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவரது மறைவிற்கு, போலீஸ் உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ஹரிபிரசாத் என்ற மகனும், சங்கீதப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

Summary

Regarding the death of a Special Sub-Inspector of Police, who was on election security duty, due to chest pain on Thursday night...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.