வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

கான்பூா் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்

கான்பூா் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்

News image

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :14 ஜூன் 2026, 12:46 am IST

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து திருச்சிக்கு வரும் ஜூன் 17, 24 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பயணிகள் வசதிக்காக உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் நிலையத்தில் இருந்து வரும் ஜூன் 17, 24 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 01927) மூன்றாவது காலை 8.40 மணிக்கு திருச்சி வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 01928) ஜூன் 18, 26 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு 4-ஆம் நாள் அதிகாலை 4.30 மணிக்கு கான்பூா் சென்றடையும்.

பெட்டிகள் விவரம், நிற்கும் நிலையங்கள்: இந்த ரயிலில் 1 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள், 7 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 8 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட 27 நிலையங்களில் நிற்கும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.