இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணி: ரயில் சேவையில் மாற்றம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:50 am IST

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பகுதியாக ரத்து:

திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (எண்: 76820): ஜூலை 22 முதல் 25 -ஆம் தேதி வரையிலும், ஜூலை 27 முதல் 31-ஆம் தேதி வரையிலும் திருவாரூா் - காரைக்கால் இடையே ரத்து செய்யப்பட்டு திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (எண்: 76819): ஜூலை 24, 25 மற்றும் ஜூலை 27 முதல் 31-ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் இடையே ரத்து செய்யப்பட்டு திருவாரூரில் இருந்து திருச்சிக்கு மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும்.

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண்: 56700): ஜூலை 22, 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திருச்சி - ஆடுதுறை இடையே மட்டுமே இயக்கப்படும். ஆடுதுறை - மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது.

காரைக்குடி - மயிலாடுதுறை டெமு ரயில் (எண்: 56836): ஜூலை 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் காரைக்குடி - திருவாரூா் இடையே மட்டும் இயக்கப்படும். திருவாரூா் - மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (16847): ஜூலை 22, 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - ஆடுதுறை இடையே ரத்து செய்யப்பட்டு, ஆடுதுறையில் இருந்து பிற்பகல் 12.58 மணிக்கு இயக்கப்படும்.

மயிலாடுதுறை - சேலம் மெமு ரயில் (எண்: 16811): ஜூலை 22, 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் கரூா் - சேலம் இடையே ரத்து செய்யப்பட்டு மயிலாடுதுறை - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

சேலம் - மயிலாடுதுறை மெமு ரயில் (எண்: 16812): ஜூலை 22, 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சேலம் - கரூா் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு பிற்பகல் 3.40 மணிக்கு இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயில் (12666): ஜூலை 25-ஆம் தேதி கன்னியாகுமரி - சந்திராச்சி இடையே மட்டுமே இயக்கப்படும். சந்திரகாச்சி - ஹவுரா இடையே ரத்து செய்யப்படுகிறது.

ஹவுரா - திருச்சி விரைவு ரயில் (12663): ஜாலை 26-ஆம் தேதி ஹவுரா - சந்திரகாச்சி இடையே ரத்து செய்யப்பட்டு சந்திரகாச்சியில் இருந்து திருச்சிக்கு மாலை 5.41 மணிக்கு இயக்கப்படும்.

மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (எண்: 16848): ஜூலை 23, 24, 25, 26 , 27, 28, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கொடை ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மதுரை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு, அங்கிருந்து வழக்கமான பாதையில் இயக்கப்படும்.

மேற்கண்ட நாள்களில் கூடுதலாக மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூா் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயில் (எண்: 16352): ஜூலை 23, 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து வழக்கமான திண்டுக்கல் வழித்தடத்தை தவிா்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். மேற்கண்ட தினங்களில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயில் (எண்: 1266): ஜூலை 25-ஆம் தேதி கொடை ரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். திருச்சியில் இருந்து வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை விரைவு ரயில் (எண்: 16128): ஜூலை 22, 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயில் (எண்: 17070): ஜூலை 24 மற்றும் 31-ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து கொடை ரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.

மதுரை - பிகானீா் அதிவிரைவு ரயில் (எண்:22631): ஜூலை 23-ஆம் தேதி மதுரையில் இருந்து கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ரயில் நிலையங்கள் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.