தமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:52 pm IST

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 11, 13-ஆம் தேதிகளில் பாலக்காடு - பாசூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

பணிகள் நிறைவடைந்ததும் பாசூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும். வரும் 15, 18, 20, 22, 25, 27, 29, செப். 1, 3- ஆகிய நாள்களில் பாலக்காடு - புகழூா் இடையே மட்டும் இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 11, 13-ஆம் தேதிகளில் கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

வழித்தட மாற்றம்: சென்னை எழும்பூா் - திருச்சி சோழன் அதிவிரைவு ரயிலானது (22675) வரும் 5, 12, 14, 21-ஆம் தேதிகளில் சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா் ரயில் நிலையங்களைத் தவிா்த்து கடலூா், விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும். வரும் 26, செப். 2 ஆகிய நாள்களில் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விழுப்புரம், விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்: திருச்சி - சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு ரயிலானது வரும் 11, 18 ஆம் தேதிகளில் திருச்சியிலிருந்து 35 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 12.10-க்குப் பதிலாக 12.45 மணிக்குப் புறப்படும்.

ஜோத்பூா் - மன்னாா்குடி அதிவிரைவு ரயிலானது வரும் 6, 20, 27 ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 60 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.

சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது வரும் 7, 11, 18, 21, 25, 28 ஆம் தேதிகளில் 20 நிமிஷங்களும், 9, 10-ஆம் தேதிகளில் 40 நிமிஷங்களும், 12-ஆம் தேதி 45 நிமிஷங்களும், 27, 31-ஆம் தேதிகளில் 30 நிமிஷங்களும், ஆக. 29, செப். 1, 2-ஆம் தேதிகளில் 50 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.