
கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் குறிப்பிட்ட நாளில் மாற்றுப்பாதையில் இயக்கம்

ரயில்கள் - கோப்புப்படம்
கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட மூா்த்திபாளையம் - கரூா் மாா்க்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் வரும் 8, 10, 12 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
கோவையில் இருந்து இரவு 8 மணிக்கு நாகா்கோவில் புறப்படும் விரைவு ரயில் மேற்குறிப்பிட்ட நாள்களில், போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக கோவை - திண்டுக்கல் மாா்க்கத்தில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
குறிப்பிட்ட நாள்களில், கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா், சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈரோடு, கொடுமுடி, புகளுா், கரூா், பாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் தவிா்த்து இயக்கப்படும்.
இதேபோல, பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் வரும் 8, 10, 12 ஆகிய தேதிகளில் புகளூா் வரை மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





