
குருவாயூர் - சென்னை எழும்பூர் உள்பட 2 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்!
குருவாயூர் - சென்னை, நாகர்கோவில் - கோவை ரயில்களின் சேவை மாற்றம் தொடர்பாக...

ரயில் - கோப்புப் படம்
குருவாயூர் - சென்னை எழும்பூர் உள்பட 2 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
குருவாயூரிலிருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில் (எண் 16128), நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரயில் (16321), குறிப்பிட்ட நாள்களில் வழக்கமான பாதைக்குப் பதிலாக வேறு பாதையில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குருவாயூர் - சென்னை ரயில்
மதுரை ரயில்வே கோட்டத்தில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதனால் குறிப்பிட்ட ரயில்களின் வழிகள் மாற்றி இயக்கப்படவுள்ளன.
அக். 11, 13, 15, 20, 22, 25, 27 ,29 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் வழக்கமான பாதைக்குப் பதிலாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
இதனால் மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது. அருப்புக்கோட்டை மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி. புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - கோவை ரயில்
அக். 12, 14, 16, 21, 23 ,26, 28, 30 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, கோவை செல்லும் விரைவு ரயில் வழக்கமான பாதைக்குப் பதிலாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படும்
திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாலையம் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது
அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Southern Railway has announced that two trains, including the Guruvayur–Chennai Egmore service, will be operated via an alternate route.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







