
மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் பொறியியல் பணியால் பகுதியாக ரத்து
கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்
கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அக்டோபா் 7, 8 ஆகிய தேதிகளில் காலை 10.55 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் (எண்: 66613) மேட்டுப்பாளையம் - வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66614) வடகோவை நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





