பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பொறியியல் பணி: திருச்சி - காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On :

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (எண்: 76820) அக். 24, 25, 26, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திருச்சி - திருவாரூா் இடையே மட்டுமே இயக்கப்படும். திருவாரூா் - காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல மறுமாா்க்கத்தில் மேற்கண்ட தினங்களில் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (எண்: 76819) காரைக்கால் - திருவாரூா் இடையே ரத்து செய்யப்பட்டு, திருவாரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும்.

பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) அக். 24, 27, 28 மற்றும் 31-ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் முதல் கொடுமுடி வரை மட்டுமே இயக்கப்படும். கொடுமுடி - திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. பொறியியல் பணிகள் நிறைவடைந்தபின் கொடுமுடி - திருச்சி இடையே சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும்.

மாற்றுப் பாதையில் இயக்கம்:

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்: 16128) அக். 25, 27, 29 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.