பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

திருச்சி-காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் அக்டோபா் 3 முதல் 5-ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் அக்டோபா் 3 முதல் 5-ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (எண்: 76820) அக்டோபா் 3 முதல் 5-ஆம் தேதி வரை திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயக்கப்படும். திருவாரூா் - காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (எண்: 76819) அக்டோபா் 3 முதல் 5-ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட 3 நாள்களும் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் திருவாரூா் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.

பாலக்காடு- திருச்சி விரைவு ரயில்:

இதேபோல, பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் அக்டோபா் 3-ஆம் தேதி பாலக்காடு டவுன் முதல் புகழூா் வரை மட்டுமே இயக்கப்படும். புகழூா் முதல் திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. பொறியியல் பணி நிறைவடைந்தபின் புகழூா் முதல் திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.