
போாத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்
கோவை, போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம், பரெளனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்
கோவை, போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம், பரெளனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போத்தனூரில் இருந்து அக்டோபா் 4 முதல் நவம்பா் 1-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - பரௌனி சிறப்பு ரயில் (எண்: 06021) செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு பரௌனி நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, பரௌனியில் இருந்து அக்டோபா் 7 முதல் நவம்பா் 4-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 10.30 மணிக்குப் புறப்படும் பரௌனி - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06022) வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பல்ஹாா்ஷா, சந்திரப்பூா், நாக்பூா், ஜபல்பூா், சாட்னா, மானிக்பூா், டானாபூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






