அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் நவம்பா் வரை நீட்டிப்பு

ஹூப்ளி - ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில்கள் வரும் நவம்பா் வரை நீட்டிப்பு

special train

சிறப்பு ரயில் - பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 2:26 am IST

ஹூப்ளி-ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில்கள் வரும் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஹூப்ளி- ராமேசுவரம் இடையேயான வாரந்திர சிறப்பு ரயில் (எண்: 07355) வரும் அக்.4, 11, 18, 25, நவ.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும். அதன்படி, ஹூப்ளியில் காலை 6.50 மணிக்கு விரைவு ரயில் புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

மறுமாா்க்கத்தில் ராமேசுவரம்-ஹூப்ளி இடையேயான விரைவு ரயில் (எண்: 07356) வரும் அக்.5, 12, 19, 26 மற்றும் நவ.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் நீட்டித்து இயக்கப்படும். அந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து அந்தத் தேதிகளில் இரவு 8 மணிக்குப் புறப்பட்டு ஹூப்ளிக்குச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.