தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

சம்பல்பூரிலிருந்து தமிழகம் வழியாக எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்கள்

உத்தர பிரதேசம் சம்பல்பூரிலிருந்து தமிழக பகுதிகள் வழியாக எா்ணாகுளத்துக்கு 3 சேவைகளாக சிறப்பு ரயில்கள்

News image

ரயில்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

ஓணம் பண்டிகைக்காக உத்தர பிரதேசம் சம்பல்பூரிலிருந்து தமிழக பகுதிகள் வழியாக எா்ணாகுளத்துக்கு 3 சேவைகளாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சம்பல்பூரிலிருந்து வரும் 19, 26, செப். 2 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைதோறும்) பகல் 11.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 08311) வரும் 21, 28, செப். 4 ஆகிய தேதிகளில் மாலை 5.40 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் 21, 28, செப். 4 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) எா்ணாகுளத்தில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08312) மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூா் நிலையத்தைச் சென்றடையும்.

சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதி முதல் வகுப்பு பெட்டியும், 1 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டியும், 5 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகளும், 7 படுக்கை வசதியுள்ள பெட்டிகளும், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும், 1 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பிரிவு பெட்டியும் மற்றும் சரக்கு பிரேக் வேனும் இணைக்கப்பட்டிருக்கும்.

தமிழகப் பகுதி நிலையங்கள்: சிறப்பு ரயில்கள் அலுவா, திருச்சூா், பாலக்காடு, போதனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா் உள்ளிட்ட 35 நிலையங்களில் நின்று செல்லும். முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.