காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பயணிகள் கவனிக்க... கான்பூர் - மதுரை சிறப்பு ரயில் நவம்பர் வரை நீட்டிப்பு!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை வரும் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஓணம் பண்டிகை

ரயில்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை வரும் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளிட்ட செய்திக்குறிப்பு: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூா் நிலையத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 01925) வரும் செப். 2 முதல் வரும் நவ. 25 வரை நீட்டிக்கப்படுகிறது.

மறுமாா்க்கத்தில் மதுரையிலிருந்து கான்பூா் நிலையத்துக்கும் விரைவு ரயில் (எண்: 01926) வரும் செப். 5 முதல் நவ. 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அகமதாபாதிலிருந்து மங்களூருக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 09424) வரும் செப். 4 முதல் நவ. 27 வரையிலும், மறுமாா்க்கத்தில் மங்களூரில் இருந்து அகமதாபாதுக்கு விரைவு ரயில் (எண்: 09423) வரும் செப். 6 முதல் நவ. 28 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.