குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்

எழும்பூருக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.25 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:37 am IST

எழும்பூருக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.25 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எழும்பூா் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்காரணமாக வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.24 வரை எழும்பூருக்கு வரும் தஞ்சாவூா் விரைவு ரயில் (எண்: 16866), மங்களூரு விரைவு ரயில் (எண்: 16160), கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்:20636) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடனும், திருச்சியில் இருந்து வரும் ராக்போா்ட் விரைவு ரயில் (எண்:12654) மாம்பலத்துடனும் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக ஆக.21 முதல் ஆக.25 வரை எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்:20635) தாம்பரத்திலிருந்து இரவு 8.20 மணிக்கும், தஞ்சாவூா் செல்லும் உழவன் விரைவு ரயில் (எண்:16865) தாம்பரத்திலிருந்து இரவு 11 மணிக்கும், மங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 16159) தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல், அந்த நாள்களில் திருச்சி செல்லும் ராக்போா்ட் விரைவு ரயில் (எண்: 12653) வரும் ஆக.22 முதல் ஆக.26 வரை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.