சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக செப். 1 முதல் அக்.15 வரை சில விரைவு ரயில்களின் இயக்க நேரம் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் நிறுத்தப்படும் ரயில்: மன்னாா்குடி-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்:16180) செப்.4 முதல் அக். 13 வரை மன்னாா்குடியிலிருந்து இரவு 10.50-க்குப் புறப்பட்டு, எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் நிறுத்தப்படும்.
மாம்பலத்தில் நிறுத்தப்படும் ரயில்கள்: திருச்சி-சென்னை எழும்பூா் ராக்ஃபோா்ட் அதிவிரைவு ரயில் (எண்: 12654) செப்.9 முதல் 15 வரையும், செப்.21 முதல் அக்.14 வரை மாம்பலத்தில் நிறுத்தப்படும்.
இதேபோல, சேலம்-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (எண்: 22154) செப்.12 முதல் 15 வரை மாம்பலத்தில் நிறுத்தப்படும். மும்பை சிஎஸ்டி-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (எண்: 22157) செப்.12 முதல் 15 வரை சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்படும்.
புறப்படும் நிலையங்களில் மாற்றம்: சென்னை எழும்பூா்–மன்னாா்குடி விரைவு ரயில் (எண்: 16179) செப்.5 முதல் அக்.14 வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.25-க்குப் புறப்படும். சென்னை எழும்பூா்-சேலம் அதிவிரைவு ரயில் (எண்: 22153) செப்.13 முதல் 16 வரை கடற்கரை நிலையத்தில் இரவு 11.30-க்கும், சென்னை எழும்பூரில் இரவு 11.55-க்கும் புறப்படும்.
உழவன் விரைவு ரயில் தாமதம்: தஞ்சை-சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில் (எண்: 16866) செப்.16 முதல் 19 வரை மாம்பலம்/கோடம்பாக்கம் பகுதியில் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.
மேலும், செப்.22 முதல் அக்.15 வரை இந்த ரயில் மாம்பலம்/கோடம்பாக்கம் பகுதியில் 30 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எழும்பூா் ரயில் நிலைய சீரமைப்புப் பணி: 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடல்

தண்டவாள பராமரிப்புப் பணி: இன்று முதல் சோழன் விரைவு ரயில் வழித்தடம் தற்காலிக மாற்றம்




