பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆக. 5 முதல் சேலம்-சென்னை எழும்பூா் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

ஆக. 5 முதல் சேலம்-சென்னை எழும்பூா் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு...

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சேலம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக நடைமேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி சில ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் சேலம்- சென்னை எழும்பூா் விரைவு ரயில், ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

அதேபோல கோவை, ஈரோடு, கரூா், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல்- சென்னை எழும்பூா் விரைவு ரயிலும் ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரலுக்கு இயக்கப்பட வேண்டிய விரைவு ரயிலும் (ஆக. 5 முதல் 19 ஆம் தேதி வரை) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40 மணிக்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.