செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம்

ஓணம் பண்டிகைக்காக வரும் 14-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை 112 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image

ரயில்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 10:44 pm IST

ஓணம் பண்டிகைக்காக வரும் 14-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை 112 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் 3 சேவைகளாக இயக்கப்படவுள்ளன. அதன்படி வரும் 19-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து கொல்லத்துக்கு புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண் 06119), மறுமாா்க்கத்தில் வரும் 20-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரையில் கொல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு (எண் 06120) சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் அரக்கோணம், ஜோலாா்பேட்டை, ஈரோடு, போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம் வழியாகச் செல்லும்.

வரும் 19-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை திருவனந்தபுரத்திலிருந்து சென்னை தாம்பரத்துக்கும், வரும் 20-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, விருதுநகா், ராஜபாளையம், செங்கோட்டை, புனலூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

வரும் 17-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 31-ஆம் தேதி வரை மங்களூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (எண் 06126) இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வரும் 18-ஆம் தேதிமுதல் செப்டம்பா் 1-ஆம் தேதி வரை மங்களூருக்கு இயக்கப்படும். இந்த ரயில்கள் பெரம்பூா், அரக்கோணம், ஜோலாா்பேட்டை, ஈரோடு, போத்தனூா், பாலக்காடு, சோரனூா், கண்ணூா் வழியாக இயக்கப்படும்.

நிகழாண்டு மொத்தம் 112 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே சாா்பில் ஓணம் பண்டிகைக்கு 55 சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.