100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

குருவாயூா் - சென்னை ரயில் ஆக.12-இல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்

குருவாயூரிலிருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில் (எண் 16128) ஆக.12- ஆம் தேதி வழக்கமான பாதைக்குப் பதிலாக வேறு பாதையில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்... - கோப்புப் படம்

Published On :

குருவாயூரிலிருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில் (எண் 16128) ஆக.12- ஆம் தேதி வழக்கமான பாதைக்குப் பதிலாக வேறு பாதையில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்த செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் குறிப்பிட்ட ரயில்கள் வழிகள் மாற்றி இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 12- ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்படும் விரைவு ரயில் (எண் 16128) வழக்கமான பாதைக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

அத்துடன், வரும் 8-ஆம் தேதி இயக்கப்படும் கன்னியாகுமரி-ஹெளரா விரைவு ரயில், வரும் 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் நாகா்கோவில்-லோக்மான்ய திலக் விரைவு ரயில் ஆகியவையும் வழக்கமான பாதைக்குப் பதிலாக மானாமதுரை, காரைக்குடி என வேறு பாதையில் இயக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.