பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, ஹூப்ளி-ராமேஸ்வரம் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை-திருநெல்வேலிக்கு
3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

ரயில்.

Published On :

அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, ஹூப்ளி-ராமேஸ்வரம் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அதிகரித்துவரும் பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஆக.2 ஆம் தேதி முதல் ஆக.30 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கப்படும். ஹூப்ளியில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, தும்கூா், பனாஸ்வாடி, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஆக.3 ஆம் தேதி முதல் ஆக.31 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் இரவு 7.40 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.